இந்திய கடற்படைத் தலைவர் இலங்கை கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்திய கடற்படைத் தலைவர் இலங்கை கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

​நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய கடற்படைத் தலைவர், அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கஞ்சன பனகொடவை சந்தித்தார்.

​இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த அட்மிரல் திரிபாதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

​இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், நீண்டகால நட்புறவை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றுதல் குறித்து கலந்துரையாடப்பட்டது. இரு தளபதிகளும் பொதுவான கடல்சார் பகுதியைப் பாதுகாப்பதற்கான கூட்டு அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

​இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இருதரப்பினரும் நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.

​அட்மிரல் திரிபாதி தனது விஜயத்தின் போது, இலங்கை அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.

Recommended For You

About the Author: admin