முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆரம்பம்..!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆரம்பம்..!

வருடா வருடம் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(22) காலை நவதானிய பூரண கும்பம் வைத்தலுடன் நவராத்திரி பூஜை வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நவராத்திரி பூஜையானது வீரத்திற்கு அதிபதியான துர்க்கை, செல்வத்திற்கு அதிபதியான இலட்சுமி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் எழுந்தருள நவதானிய பூரண கும்பம் வைக்கப்பட்டு, பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன

இந்த வழிபாட்டு நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள் மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: admin