மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் பிரதி அமைச்சர் கலந்துரையாடினார்..!
மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ மஹிந்த ஜெயசிங்ஹ அவர்கள் இன்றைய தினம் (22.09.2025) பி. ப 02.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. கே. ஜி. எச். எச். ஆர். கிரியல்ல ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
இக் கலந்துரையாடலில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகளை மக்களுக்கு மேன்மேலும் வினைத்திறனாக வழங்குதல் தொடர்பாக கௌரவ பிரதி அமைச்சர் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி கலந்துரையாடியதுடன், எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டதுடன், உத்தியோகத்தர்களின் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாகவும் குறிப்பிட்டார்.


