2025 (2026) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
2025 ஆம் ஆண்டுக்கான (2026 ஆம் ஆண்டில் நடைபெறும்) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
அறிவிப்பின்படி, பாடசாலை பரீட்சார்த்திகள் தங்கள் பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தங்கள் தேசிய அடையாள அட்டையைப் (NIC) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது தேசிய அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்.
அனைத்து விண்ணப்பங்களும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகியவற்றின் ஊடாக சரியாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

