யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு..!
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வானது நலன்புரிச் சங்க தலைவரும் புள்ளிவிபரப்பிரிவின் பிரதிப் பணிப்பாளருமான திரு. ம. வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் பங்குபற்றுதலுடனும் இன்றைய தினம் (19.09.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் இரத்ததான ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் வைத்திய அதிகாரி S.சண்முகப்பிரியா,
பொதுச் சுகாதார பரிசோதகர் திரு. த.ரவீனதாஸ், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
மேலும், இரத்ததான நிகழ்வில் 31 மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் குருதிக் கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


