உற்பத்தித்திறன் மூலம் வளமான கிராமத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை..!
“உற்பத்தித்திறன் மூலம் வளமான கிராமம்” சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டத்தினை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறையானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையின் கீழ் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (19) இடம் பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி பட்டறையின் போது தெளிவூட்டல்களை உற்பத்திதிறன் செயலக உதவி பணிப்பாளர் தர்ஷனி ரனசிங்க மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உற்பத்தித்திறன் மாவட்ட இணைப்பாளர் ஆர். புவனேந்திரன் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டது.
2025 – 2027 காலப்பகுதியில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
மேலும் அரசாங்கத்தால் நிலையான கட்டமைப்பின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட் “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம், நெறிமுறைக் கொள்கைகள், தூய்மையான பௌதீக சூழல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை அபிவிருத்தி செய்வதற்கான நாடு தழுவிய தார்மீக அர்ப்பணிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நோக்கங்களை அடைவதற்காக, “கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டம், தேசிய ரீதியில் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இணையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவையும் உள்ளடக்கிய தலா ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் உடல்நலம், வீட்டு முகாமை மற்றும் சமூக நல்வாழ்வு, கலாச்சார மற்றும் ஆன்மீக அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய ஆறு முக்கிய கூறுகள் மூலம் சமூக உற்பத்தித்திறன் என்ற கருத்துக்கள் மூலம் அந்த கிராமங்களை உற்பத்தித்திறனுடன் அபிவிருத்திப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக உற்பத்தித்திறனை அதிகரிப்பது, முழு இலங்கை சமூகத்தின் உற்பத்தித்திறனை அபிவிருத்தி செய்வதையும், அதன் மூலம் இலங்கையின் வளர்ச்சி இலக்குகளை அடைவதினை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், உற்பத்திதிறன் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.அச்சுதன், சீத்தானி அபேவர்த்தன மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


