“மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் சாவகச்சேரியில் மரம்நடுகை..!
சாவகச்சேரி நகரசபையின் ஏற்பாட்டில் 16/09 செவ்வாய்க்கிழமை காலை கோவிற்குடியிருப்பு கடல் வட்டாரத்தில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் மரநடுகை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி உள்ளூராட்சி வார நிகழ்வில் தென்மராட்சிப் பிரதேச செயலாளர் சத்தியசோதி விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் சாவகச்சேரி நகரசபை செயலாளர்,நகரசபையின் உபதவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள்,நகரசபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு மரநடுகை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

