இலங்கையின் இரண்டாவது ATUL காட்சியறை திறந்து வைப்பு..!
இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான Softlogic Holdings PLC, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் முச்சக்கர வண்டி உற்பத்தியாளரான ATUL Auto Limited உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தி, கிழக்கு மாகாணத்தில் முதலாவது முச்சக்கர வண்டி காட்சியறையினை இன்று (16) திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் திறந்து வைத்தது. இதனை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் Softlogic Holdings PLC நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள். வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது 4 வாடிக்கையாளர்களுக்கான முச்சக்கர வண்டிகளும் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அத்துடன் இது இலங்கையில் இரண்டாவது காட்சியறை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
60 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும் 24 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருப்பும் கொண்ட ஒரு பிராண்டான ATUL Auto, பல்வேறு போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட நீடித்த, எரிபொருள் திறன் கொண்ட மற்றும் பராமரிக்க எளிதான முச்சக்கர வண்டிகளை தயாரிப்பதில் பெயர் பெற்றது. இந்தக் கூட்டாண்மை மூலம், Softlogic உள்ளூர் சந்தை தேவைகளுக்கு ஏற்ப பெட்ரோல் மூலம் இயங்கும், ஸ்டைலான மற்றும் சிக்கனமான பயணிகள் வாகனமான Atul RIK, வணிகப் போக்குவரத்திற்கு ஏற்ற டீசல் மூலம் இயக்கப்படும், விசாலமான மாடல் Atul GEM Paxx, மற்றும் டெலிவரி, விவசாயம் மற்றும் தளவாட பயன்பாடுகளுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்ட வலுவான உயர்-சுமை சரக்கு வகை Atul GEM Cargo ஆகிய மூன்று முக்கிய மாடல்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.


