சட்டவிரோத வெளிநாட்டு மதுபானம்: மோதரவில் கடற்படை, STF இணைந்து அதிரடி நடவடிக்கை; ஒருவர் கைது.
கொழும்பின் மோதர பகுதியில், சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 180 போத்தல் வெளிநாட்டு மதுபானங்களை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது கைப்பற்றியுள்ளனர்.
செப்டெம்பர் 13, 2025 அன்று, மேற்கு கடற்படை கட்டளையகத்துக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 45 வயதான மோதர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரும், கைப்பற்றப்பட்ட மதுபானங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மோதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

