வீரமுனை வளைவு பிணக்கு 09.01.2026 அன்றுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது..!
சமூக பொறுப்பினை கருத்தில் கொள்ள வேண்டும் என இரு தரப்பினருக்கும் நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல்
வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இன்று பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களும் பிரதிவாதிகளான ஆலய நிர்வாகம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம் சுமந்திரன் அவர்களும் மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகளான சுதர்சன்,கமல் ,பெனிஸ்லஸ் துஷான், அ.நிதான்சன் ஆகியோர் மன்றில் தோன்றி இருந்ததோடு இரு சமூகமும் சமூக. பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதவான் நீதிமன்றத்தினால் பணிக்கப்பட்டது. மேலும் அதிகாரம் சம்மந்தபட்ட விடயம் அல்ல இது சமூகம் சார்ந்த விடயம் எனவும் குறிப்பிடப்பட்டது.
மேலும் இந்த பிணக்கை இணக்கமாக சட்ட அனுமதியோடு தீர்ப்பதற்காக நீதிமன்றம் எதிர்வரும் வருடம் 09.01.2026 அன்றுவரை ஒத்திவைத்துள்ளது


