மயிலத்தமடுவில் 730 நாட்களை கடந்து அறவழிபோராட்டம்..!
15.09.2025
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 2 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (15) சித்தாண்டியில் பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது மேய்ச்சல் தரை காணியை வர்த்தமானிப்படுத்துமாறு கோரியும் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரியும் சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி, போராட்டம் நடக்கும் இடம் வரை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.


