2026ஆம் ஆண்டுக்கான பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு!
கல்வி அமைச்சு, 2026ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறும்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2026 ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5ஆம் திகதி வரையும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026 ஓகஸ்ட் 9ஆம் திகதியும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2026 டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடத்தப்படும் என்றும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

