நல்லூரில் பெண் நாய்களைப் பிடித்து ஒப்படைப்போருக்கு ரூபாய் 600 சன்மானம்

நல்லூரில் பெண் நாய்களைப் பிடித்து ஒப்படைப்போருக்கு ரூபாய் 600 சன்மானம்

​நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு பெண் தெருநாய்க்கும் 600 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என நல்லை பிரதேச சபை அறிவித்துள்ளது.

​கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நடைபெறும் பெண் தெருநாய்களுக்கான இலவச கருத்தடை திட்டத்துடன் இணைந்து, இந்த அறிவிப்பு நல்லை பிரதேச சபை தலைவர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

​தெருநாய்களால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்றுநோய்கள் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin