புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் அரசியல்வாதி செய்த செயல்

புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் அரசியல்வாதி செய்த செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த பணத்தினை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி மோசடி செய்தமைக்காக, பணம் வழங்கிய புலம்பெயர் தமிழர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்றைய தினம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு, நீதவான் நீதிபதி தலைமையில் நடைபெற்றது.

 

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் முதலீடுகளை செய்ய முனையும் புலம்பெயர் தமிழர்களை இவ்வாறு ஏமாற்றி மோசடி செய்வது எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களை அச்சமடைய செய்யும் என குறித்த வழக்கினை தாக்கல்செய்த புலம்பெயர் தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin