கிளி,மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு..!

கிளி,மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு..!

கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று(02.09.2025) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில், இன்று காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகி குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

நிகழ்வில் வரவேற்புரையினை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு நிகழ்த்தினார்.

இதன் வளவாளர்க்களாக RTI Commission Commissioner Jagath Liyana Arachchi, வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் N.A.K.L Wijenayake, PAFFREL National Coordinator Sujiwa Gayanath ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உள்ளூராட்சி மன்ற அலுவலகங்களில் தகவல் உரிமையை அணுகுவதற்கு காணப்படும் ஏற்பாடுகள், தகவல் அறியும் உரிமைச் சட்ட அறிமுகம், தகவல் கோருதல் தொடர்பான நடைமுறைகள் மற்றும் சவால்கள் முதலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.

குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கில் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கிளிநொச்சி மற்றும் மன்னர் மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: admin