நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காரணமாக பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இலங்கை அதிபர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படாததன் காரணமாக நாட்டில் தற்போது 4000 க்கும் மேற்பட்ட அதிபர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக மட்டுப்படுத்தியுள்ள நிலையில், பெருமளவிலான அதிபர்களும் இவ்வருடம் ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அதிபர் சேவைகள் சங்கத்தின் தலைவர் சுனில் பிரேமதிலக தெரிவித்துள்ளார்.