அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் சண்டித்தனம்..!

அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் சண்டித்தனம்..!

அறுகம்குடாவில் விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் பொத்துவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்ததாக கூறப்படும் தம்பதியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

கைதான சந்தேக நபர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

 

விருந்தகத்தன் உரிமையாளரும் அவரது மனைவியும் தங்கள் வாகனத்தில் பயணித்தபோது இரண்டு இஸ்ரேலியர்களும் வீதியை வழிமறித்ததால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் அது தாக்குதலாக மாறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin