பேர ஏரியை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் மின்சாரப் படகுகளைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சூரிய ஒளியில் இயங்கும் மின்சாரப் படகுகள் மூலம் ஒரு நாளைக்கு 3,000 கிலோகிராம் கழிவுகளை அகற்ற முடியும்.
ஆரம்பத்தில் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், எதிர்காலத்தில் நான்கு படகுகளுடன் விரிவுபடுத்தப்படவுள்ளது.
பேரா ஏரியின் நீர் தரத்தை மேம்படுத்துதல், அதன் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டமைத்தல், அப்பகுதியின் இயற்கை அழகை மேம்படுத்துதல் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகும்.

