மேல் மாகாணத்தில் நாய்களின் சனத்தொகையை மனிதாபிமான முறையில் மற்றும் நிலையான வகையில் நிர்வகிப்பதற்கான புதிய திட்டத்தை மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப் அறிவித்துள்ளார்.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘ஒன் வெல்ஃபேர்’ (One Welfare) மாதிரியின் அடிப்படையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
இந்தத் திட்டத்தில் சத்திரசிகிச்சை முகாம்கள், செல்லப் பிராணிகளைப் பதிவு செய்தல், பாதுகாப்பான இடங்களை ஒதுக்குதல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்புக்கான பகிரப்பட்ட செயன்முறை ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொது மக்களிடையே செல்லப்பிராணிகளைப் பொறுப்புடன் வளர்ப்பது மற்றும் நாய்க்கடி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகங்களின் ஆதரவுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

