திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (28.08.2025) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் பங்குபற்றலுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் இணைத்தலைவரான கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, எஸ். குகதாசன், இம்ரான் மஹ்ரூப், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

“திருகோணமலை மாவட்டத்தை ஒரு பொருளாதார மையமாக மேம்படுத்துவதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சியை அடைய முடியும்.” என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள் இதன்போது கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாவட்டத்தின் கனிம வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி அவற்றிற்கு மதிப்பினை அதிகரித்து ஏற்றுமதிக்குத் தகுந்த திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென்றும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென்றும் கூறினார்.

மேலும், தற்போது நாட்டில் தொழில்களுக்காக பயன்படுத்தப்படுவது மொத்த நிலப்பரப்பில் 0.01% மட்டுமே ஆகும். எனவே, மாவட்டத்தில் தொழில்களுக்கு பயன்படுத்தக்கூடிய நிலங்களை பதிவு செய்து தொழில்துறை மையங்களை உருவாக்கவும், அமைச்சரவை இடையிலான ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

மாவட்ட தொழில் குழுக் கூட்டம் மிக முக்கியமானது. எனவே அதைச் செயல்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் தொழில்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் வழங்கக்கூடிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன. அத்துடன் பல அபிவிருத்தி தொடர்பான திட்டங்களும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதிக்காக முன்மொழியப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin