ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இலங்கையின் போக்குவரத்தை முடக்குவதற்காக மேற்கொண்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சு இலங்கை போக்குவரத்து சபையை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருவதுடன், அதற்கு ஏற்றவாறான நேர அட்டவணைகளையும் வகுத்திருந்தது.
குறித்த நேர அட்டவணைக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக இ.போ.ச.வின் ஒரு தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
ஆனால், இந்த அணி நாமல் ராஜபக்ஸவினுடையது என்பது அம்பலமாகியுள்ளது.
இ.போ.ச. தொழிற்சங்க தலைவர்களை நெலும் மாவத்தைக்கு வரவழைத்து நாமல் ராஜபக்ஸ வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு கூறிய விடயம் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

