மருத்துவர்களின் வேலைநிறுத்தம்: திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய போராட்டம்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), மருத்துவ இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அடுத்த திங்கட்கிழமை (25) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் திங்கட்கிழமை காலை 08 மணிக்கு நாடு முழுவதும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தது.

