ரணிலின் வெளிநாட்டுப் பயணத்திற்கு நிதியளித்தது குறித்து முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் மீது விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கு நிதியுதவி அளித்தமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு எதிராக விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை பொலிஸார் இன்று (23) உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்வதால், ஏகநாயக்க கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது என பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
விக்கிரமசிங்க, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்று (22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

