ரணிலுக்கு அர்ஜுன மகேந்திரன் பத்திரப் பிணை மோசடி வழக்கில் தொடர்பா?
இலங்கையில் பல ஊடகங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ஜுன மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.
அந்நேரத்தில் பிரதமராக இருந்த விக்கிரமசிங்க, மகேந்திரன் வெளிநாடு செல்ல அனுமதி அளித்ததாகவும், ஆனால் அவர் சிங்கப்பூரிலிருந்து திரும்பாததால் அதற்கான பொறுப்பு குறித்து சிக்கல் எழுந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய முன்னேற்றமாக, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அர்ஜுன மகேந்திரனை வரும் செப்டம்பர் 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சமன்கள் பிறப்பித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த மகேந்திரன், 2015ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பத்திரப் பிணை மோசடி வழக்கில் சந்தேகநபராக ஏற்கெனவே பெயரிடப்பட்டுள்ளார்.

