திரையரங்கு சிற்றுண்டிச்சாலைகள் மீது திடீர் சோதனை: அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை
கொழும்பிலுள்ள மூன்று திரையரங்க சிற்றுண்டிச்சாலைகளில், பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நேற்று (22) திடீர் சோதனைகளை நடத்தியது.
அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு பொருட்களை விற்க வேண்டாம் என அனைத்து வர்த்தகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடு செய்ய விரும்பினால், அலுவலக நேரங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

