சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: முன்னாள் அமைச்சர்கள் மூவரை நோக்கி பொலிஸ் விசாரணை

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: முன்னாள் அமைச்சர்கள் மூவரை நோக்கி பொலிஸ் விசாரணை

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், பாராளுமன்றத்தில் அதிகாரம் செலுத்திய முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இதன்படி, முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் மீது இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

 

2006 இன் இலக்கம் 5 மற்றும் திருத்தப்பட்ட 2011 இன் இலக்கம் 40 ஆகிய சட்டங்களின் பிரகாரம், இந்த முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மூவரும் எதிர்காலத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விசாரணைகளுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, தற்போது வேறு ஒரு குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

Recommended For You

About the Author: admin