இலங்கைக்கு 2025 இல் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை:

இலங்கைக்கு 2025 இல் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை: சுற்றுலாத்துறை வலுவான வளர்ச்சி

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனை எட்டியுள்ளது. இது, நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் வலுவான வளர்ச்சிப் பாதையில் இருப்பதையும், ஒரு முதன்மை பயண இடமாக இலங்கை வளர்ந்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.

 

இந்த ஆண்டின் ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 17 வரையிலான காலப்பகுதியில், அதிகபட்சமாக இந்தியாவிவிலிருந்து 307,502 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 145,448 பேரும், ரஷ்யாவிலிருந்து 117,681 பேரும் வருகை தந்துள்ளனர்.

 

இந்த வளர்ச்சிக்கு, உள்நாட்டு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், வீசா நடைமுறைகளை இலகுபடுத்துதல் மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்தல் போன்ற பல திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும் என்ற இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிலையில், இந்த ஆண்டு “சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாக” அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுற்றுலாத்துறை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், இந்தத் துறையில் உள்ள நிபுணர்களின் திறன்களை வளர்ப்பதற்கும் பல திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: admin