சதொசவில் பொதியிடப்பட்ட அரிசி அறிமுகம்

சதொசவில் பொதியிடப்பட்ட அரிசி அறிமுகம்

தேசிய சதொச வர்த்தக முத்திரையின் கீழ் பொதியிடப்பட்ட நாடு மற்றும் வெள்ளை அரிசி சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா நேற்று (18) நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள லங்கா சதொச விற்பனை நிலையத்தில் நடைபெற்றது.

இதில் தேசிய கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோசல வில்பவ மற்றும் லங்கா சதொச தலைவர் கலாநிதி சமித பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இதன்படி, இன்று முதல் நாடு முழுவதும் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் தேசிய சதொச வர்த்தக முத்திரையின் கீழ் பொதியிடப்பட்ட நாடு மற்றும் வெள்ளை அரிசியை கொள்வனவு செய்ய முடியும்.

எந்தவொரு தட்டுப்பாடும் இல்லாமல் தரமான பொருட்களை நியாயமான விலையில் விநியோகிப்பதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin