யாழ்ப்பாணம் மாநகர சபையில் கோல உடையின்றி சபை அமர்வில் பங்குகொண்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பேராசிரியர் கபிலன் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதக் கூட்டம் இன்று மாநகர முதல்வர் திருமதி.வி.மதிவதனி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மதிய நேரம் சபை அமர்வில் பங்குகொண்ட உறுப்பினர் கலர் ரி சேட்டுடன் கலந்துகொண்டதனை சக உறுப்பின்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்து இதனை அனுமதிக்க முடியாது என சக உறுப்பினர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து ஓர் விடயத்தை முன் வைக்க முயன்ற உறுப்பினரிடம் கூற வந்த விடயத்தை மட்டும் கூறி ஆடை ஒழுங்கை கவனித்து சபைக்கு பிரசன்னமாகுமாறு அறிவுறுத்தினார்.
இருந்தபோதும் உறுப்பினர் சபையிடம் மன்னிப்புக்கோரி சபையில் இருந்து வெளியேறினார்

