மயிலிட்டி துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

மயிலிட்டி துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

அவர்களது படகுகளுக்கு இடமில்லாமலும், கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப் படகுகள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலும், மயிலிட்டி துறைமுகத்தை முறையாக பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகள் நேற்று (13) தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பிராந்திய மீன்பிடி பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும் மயிலிட்டி துறைமுகம் புதுப்பிக்கப்பட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், அதன் முழுப் பலனையும் தென்னிலங்கை மீனவர்களே அனுபவித்து வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர். வடக்கு படகுகளுக்கு போதிய இடவசதி இல்லாமல் மிகக் குறைவான இடமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களது படகுகள் சேதமடைவதாகவும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மயிலிட்டி துறைமுகத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்தார். அவருடன் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வலி. வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான ஸ்ரீபவானந்தராஜா, வலி. வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ். சுகிர்தன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சி. சுதீஸ்னர், வலி. வடக்கு பிரதேச சபை செயலாளர் சி. சிவானந்தன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோரும் கள விஜயம் மேற்கொண்டனர்.

Recommended For You

About the Author: admin