வடகிழக்கு ரீதியில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலிற்கு ஆதரவளிக்குமாறு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அழைப்பு..
இன்றைய தினம் காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சபை உறுப்பினர்களுடனும் இடம்பெற்றது.
இறைவணக்கத்தை தொடர்ந்து தமிழில் ஒலிபரப்பப்பட்ட தேசிய கீதத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமர்வில் தவிசாளரினால் முல்லைத்தீவு மாவட்டம் கரடியனாறு பொலிஸ் பிரிவு இராணுவத்தினரால் தாக்கப்பட்டு காணாமல் போன நிலையில் முத்தையன் கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் கபில்ராஜ் அவர்களுக்கு மௌன அஞ்சலி ஏற்பாட்டினையும் சபையில் முனனெடுத்து நிகழ்த்தினார்.
இதன் போது கருத்து கூறுகையில் வடகிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழர்களுக்கு அநீதி இளைக்கப்படுவதாகவும், இவ்வாறான இராணுவத்தினரின் மிலேச்ச தனமான செயல்களை வன்மையாக கண்டித்து இந் நல்லாட்சி அரசாங்கத்திலே நீதியான தீர்வு வழங்க வேண்டியது உங்களது பொறுப்பு எனவும் கேட்டுக்கொண்டதுடன் இவ்வாறான கெடுபிடிகளுக்கு எதிராக எமது தமிழரசு கட்சியினரால் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாள் நிகழ்விற்கு இச்சபையின் எம்முடன் இணைந்து பயணிக்கும் கட்சியினரும் ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் காரைதீவின் பொதுமக்கள் சார்பாகவும் கட்சியினரின் முன்னெடுப்பிற்கு அமைவாக ஹர்த்தாள் நிகழ்விற்கு பூரணமான ஒத்துழைப்பையும் வளங்குவதாகவும் தெரிவித்தார்.
இதனை அடுத்து பிரதேச சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தொகையில் 80% மாத்திரமே மீள்நிரப்பல் மூலமாக வழங்கப்படுகின்றது மிகுதி 20% தொகையானது சபையின் நிதி மூலமே வழங்கப்பட்டு வருவதினால் மக்களுக்கான அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளது.இதனால் அரசினரால் வழங்கப்படும் மீள்நிரப்பல் தொகையினை 100% ஆக வழங்குவதற்கு முன் வைக்க பக்கம் பட்ட பிரேரணைக்கு சபை அனுமதி வழங்கியது.
மேலும் வர்த்தகமானி அறிவித்தலுக்கு தொலைபேசி பாவனைக்காக மாதாந்த கட்டணமாக தவிசாளர்(2500/=) உபதவிசாளர்(1500/=)உறுப்பினர்களுக்கு மாதாந்தம் (1000/=)இதன் அடிப்படையில் வழங்க சபை உத்தேசித்துள்ளதுடன் பிரதேச சபைக்குரிய வாகனத்தினை தவிசாளர் அலுவலக பயன்பாட்டிற்காக செயற்படுத்தும் போது மாதம் ஒன்றிற்காக பயன்படுத்தக்கூடிய எரிபொருள் அளவு பற்றி தீர்மானித்த வேளையில் ஒவ்வொரு உறுப்பினர்களும் பல அளவுகள் விபரம் பற்றி சுய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அவ்வேளை உபதவிசாளர் M.H.M இஸ்மாயில் அவர்கள் தெரிவிக்கையில் தவிசாளர் அவர்கள் அளவுக்கதிகமாக வாகனம் பயன்படுத்தவே மாட்டார், மக்கள் வரிப்பணத்தில் நூதனமான முறையில் கையாள்பவர் ஆகையினால் அவர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது ஆகையால் அவர்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய தேவைகள் நிலவுகின்ற வேளை அவற்றிற்கு போதுமான எரிபொருளை பயன்படுத்துங்கள் என கூறினார் அதற்கு அமைவாக உபதவிசாளரின் கருத்தினை சபை உறுப்பினரும் ஏற்றுக்கொண்டனர்
உபசரணைச் செலவுக்கும், அலுவலகத்திற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் சபை அங்கீகாரம் வழங்கியதுடன் பிரதேச சபை ஊழியர்களுக்கு இடர்கடனாக ஒவ்வொருவருக்கும் ரூ.100,000.00 தொகையினை வழங்க தவிசாளர் முன்வைத்த பிரேரணைக்கு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்ததுடன் தொகையை சபையின் வருமானத்தை கொண்டு அதிகரிப்பது தொடர்பில் உறுப்பினர்களிடம் வாதபிரதி வாதங்கள் எழுந்தது.
இதன்போது மாவடிப்பள்ளி கிராமத்திற்கு சிறுவர் பூங்கா ஒன்றினை அமைக்குமாறும், அதற்கான காணி கிராம சேவை உத்தியோகத்தரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 29.07.2025 நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கடந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய குறிப்பிட்ட காணியினை குறித்த வட்டார கௌரவ உறுப்பினர்களுடன் பார்வையிட்டு பெற்றுக்கொள்வதற்கான தொடர் மேற்கொள்ள சபை அனுமதி கோரப்பட்ட போது மாவடிப்பள்ளியை சேர்ந்த இரு உறுப்பினர்களும் காணிப்பெறுவதில் உள்ள விடயனங்களை சபைக்கு முன்வைத்து தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், பிரதேச சபை உறுப்பினருமான கி. ஜெயசிறில் அவர்கள் சபையிலே குறிப்பிட்டிருந்தார் வட கிழக்கில் இடம்பெற்ற ஆயுத போராட்டங்கள் இனத்தை அழிப்பதற்காக அல்ல எமது இனத்தை பாதுகாப்பதற்காவே எனவும் தற்காலத்தில் நம் சிறுபான்மையினருக்கு ஏற்படும் அநீதிகளை ஊடகங்கள் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்கின்றோம். அத்தொலைத்தொடர்பு அற்ற காலத்தில் இடம்பெற்ற இளைஞர் யுவதிகள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலைகள் செய்தனர் இவற்றினை நிறுத்தவே எம்மவர்கள் அன்று ஆயுதம் ஏந்தியதினர் எனவும் அதே போன்று இன்று கவின்ராஜ் அடித்து கொல்லப்பட்டதை அறிந்த எம்மினமே கொந்தளித்து கொண்டிருப்பதாகவும் ஆனால் இவ் அரசு கொலை,கொள்ளையினை ஒழிப்பதாக கூறுகின்றனர் ஆனால் தமிழர்களுக்கு வடகிழக்கில் இன்னும் நீதி கிடைக்கவில்லை, இதனடிப்படையில் எமது கட்சியினரால் மேற்கொள்ளும் ஹர்த்தாள் நிகழ்விற்கு மலையத்திலுள்ள தலைவர்களும் ஆதரவினை வழங்குகின்றனர் எனவும் இந்த சபையின் ஊடாக கேட்டுகொள்கின்றேன் அனைத்து வடக்கு, கிழக்கு உட்பட மலையக வாழ் தமிழர்களும் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெற இருக்கும் ஹர்த்தாளுக்கு ஆதரவு தந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் நீதி கிடைக்க ஒற்றுமையுடன் ஒன்று சேருமாறும் விசேட உரையாற்றினார். இதன் போது இச்சபையிலே எங்களுடன் இணைந்து பயணிக்கும் ஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.


