அரசிற்குள் பிளவுகள் இருப்பதாக வெளிவரும் தகவல்கள் உண்மையல்ல என தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதாக அவர் கூறினார்.
பிரதமரின் தலைமையில் ஒரு தனிக்குழு இயங்குவதாக சித்தரித்து, அரசில் பிளவுகளை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
“பிரதமரின் தலைமையில் ஒரு குழு இருப்பதாகவும், அரசாங்கத்திற்குள் பிளவுகள் இருப்பதாகவும் காட்ட அவர்கள் முயற்சிக்கின்றனர், ஆனால் அது உண்மையல்ல” என அவர் தெரிவித்தார்.

