மின்னேரியா-பட்டோயா பாலம் அருகே இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து மற்றும் பாரவண்டி (டிப்பர்) மோதலில் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் மதுரு ஓயாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, பாரவண்டியுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் பேருந்து மற்றும் பாரவண்டியின் ஓட்டுநர்களும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.
காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் ஹபரண வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

