மூதூர் கோர விபத்தில் தோப்பூரைச் சேர்ந்த முகம்மது ஜெம்சித் உயிரிழப்பு

அதிகாலை மூதூர் பிரதேசத்தில் ஏற்ப்பட்ட பாரிய விபத்தில் படுகாயமடைந்த தோப்பூர் அல்லை நகரைச் சேர்ந்த முகமது ஜெம்சித் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் ஹினாயதுல்லா (மு. தாதி. உத்) – காசறா (ஓ.ஆசிரியை) ஆகியோரின் புதல்வராவார்

விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு இளைஞரான சிஹான் என்பவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்

இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது திருகோணமலையில் இருந்து தோப்பூர் நோக்கி வந்த டிப்பர் ரக லாரியுடன் தோப்பூரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த காரும் மூதூர் பச்சநூர் சந்தியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin