ஹெரோயின் மற்றும் திருடப்பட்ட பொருட்களுடன் இருவர் கைது
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில், 3 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (31) நண்பகலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அவரது வீட்டில் இருந்து அடையாளம் காணப்படாத பல கைபேசிகள் மற்றும் லேப்டாப் கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வெல்லம்பிட்டிய பகுதியில் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த மற்றொரு சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 41 மற்றும் 64 வயதுடையவர்கள் எனவும், சேதவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேபோல், சந்தேகநபர்களிடமிருந்து 18 கைபேசிகள், 2 லேப்டாப் கணினிகள், 1 டேப்லெட், ஒரு பொலிஷர் இயந்திரம், 5 கிரைண்டர்கள், 3 கிரில் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

