நாவற்குழியில் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு தவணை இடப்பட்டது..!
கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழிப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22இளைஞர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் சாவகச்சேரி நீதவான் தீதிமன்றில் இடம்பெற்று முடிவுற்று 30/07 புதன்கிழமை தீர்ப்பிற்காக திகதியிடப்பட்ட போதிலும் நீதிபதி விடுமுறையில் இருக்கும் காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை தீர்ப்பிற்காக தவணையிடப்பட்டிருப்பதாக சட்டத்தரணி அம்பிகா சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மேற்படி 22இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ் மேல் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் விசாரணைகள் குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு உரித்தான சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் சில வருடங்கள் விசாரணைகள் இடம்பெற்று தற்போது விசாரணைகள் முடிவுற்று தீர்ப்பிற்காக வழக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


