Govpay வழியாக அபராதம் செலுத்தும் திட்டம் இன்று முதல் அமுல்
மேல் மாகாணத்திலும் அதிவேக நெடுஞ்சாலைகளிலும் Govpay வழியாக நிகழ்விட அபராதம் வசூலிக்கும் முறை இன்று (ஜூலை 28) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த அறிவிப்பை விழிப்புணர்வு ஊடக சந்திப்பில் வெளியிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அபராதத் தொகைகளில் எந்த மாற்றமும் இல்லை. 33 வகையான குற்றங்களுக்கான நிகழ்விட அபராதங்களை Govpay வழியாகச் செலுத்த முடியும். இதன் மூலம் அபராதம் செலுத்துபவர்கள் தபால் நிலையங்களுக்குச் சென்று பணம் செலுத்தும் சிரமத்தையும் செலவையும் சேமிக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

