வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் கலந்துரையாடல்..!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தில் கலந்துரையாடல் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் 25/07 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
சங்கத்தில் செயலாளர் ஆனந்தநடராசா லீலாதேவி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்,
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா,மன்னார் மாவட்டங்களின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி சங்கம் சில காரணங்களால் இரண்டாகப் பிரிவடைந்துள்ள நிலையில்
சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


