முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு அபிவிருத்திக்கான தேசிய வார நிகழ்வு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு அபிவிருத்திக்கான தேசிய வார நிகழ்வு.!

முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு அபிவிருத்திக்கான தேசிய வாரம் – 2025 நிகழ்வு இன்றைய தினம்(24) முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் தண்ணீரூற்று பரிமத்தியா முன்பள்ளி வளாகத்தில் காலை 9.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

 

குறித்த தேசிய வார நிகழ்வானது யூலை14 முதல் 20 வரை நடைபெறுவதோடு இறுதி நாள் நிழ்ச்சித்திட்டமானது “சிறுவர் நாம் உலகை வெல்வதற்கு – விளையாட்டுக்கும் இடமளியுங்கள்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிகழ்வில் நான்கு முன்பள்ளிகளைச் சேர்ந்த 150 மழலைகள் கலந்துகொண்டு விளையாட்டில் மூலம் கூடி மகிழ்ந்தனர்.

 

மேலும் குறித்த இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்தோடு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி லிசோ கேகிதா, கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர், மாவட்ட முன்பிள்ளைப் பருவ உத்தியோகத்தர், ஏனைய உத்தியோகத்தர்கள், மழலைகள், பெற்றோர் முதலானோர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin