சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் பதிவாகி வருகின்றன.
அந்தவகையில் வருடமொன்றில் அதிகளவான சர்வதேச போட்டிகளை வென்ற இந்திய அணியின் தலைவர் பட்டியலில் மகேந்திரசிங் தோனி முதலிடத்தில் இருந்தார்.
ரோஹித் சர்மாவிற்கு முதலிடம்
தற்போது மகேந்திரசிங் தோனியை பின்தள்ளி, ரோஹித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
2016ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி தலைவராக செயற்பட்ட போது 15 வெற்றிகளை பெற்றிருந்ததுடன், இந்த ஆண்டில் ரோஹித் சர்மா 16 வெற்றிகளை பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ்வின் சாதனை
இதேவேளை, இருபதுக்கு 20 போட்டிகளில் ஒரே ஆண்டில் இந்திய அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் அதிகளவான ஓட்டங்களை பெற்று ஷிகர் தவானின் சாதனையை முறியடித்துள்ளார்.
2018ஆம் ஆண்டில் இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் இருபது போட்டிகளில் 689 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், அதனை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.
இதற்கு முன்னர், 2016ஆம் ஆண்டில் விராட் கோலி இந்திய அணிக்காக 641 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்திருந்தார்.
இறுதியாக இடம்பெற்ற தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் அவர் விளையாடியதன் மூலம் இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.
இதற்கமைய, 2022ஆம் ஆண்டில் இதுவரை இடம்பெற்றுள்ள இருபதுக்கு 20 போட்டிகளில் 732 ஓட்டங்களை பெற்றுள்ளார்.