அதிகமான இந்தியர்கள் தனது தாய்நாட்டிற்கு வருகை தந்து, தற்போதைய சவால்களில் இருந்து இலங்கை மீள்வதற்கு உதவ வேண்டும் என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்ய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிதித் தலைநகரான மும்பாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
புதிய பாதையில் இலங்கை
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ இலங்கை தனது வருமானம் மற்றும் வேலை வாய்ப்பிற்காக சுற்றுலாத்துறையை அதிகம் சார்ந்திருப்பதால், இத்தகைய வருகைகள் உதவும்.
கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் நாங்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்துவிட்டோம். இந்தநிலையில் புதிய பாதையில் செல்ல விரும்புகிறோம்.
இலங்கைக்கு இம்முறை இந்தியாவிடமிருந்து ஆதரவு தேவை இலங்கைக்கு இந்தியர்கள் பூரண ஆதரவை வழங்குவார்கள் என நம்புகின்றோம்.
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையும் அதிக ஆதரவை வழங்கி வருகின்றனர்.”என கூறியுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர்
இதேவேளை,இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அங்கு உரையாற்றுகையில், “இலங்கை மீண்டும் தனது இயல்புக்கு திரும்பியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக இலங்கை உண்மையில் அரசியல் மற்றும் நிதி அமைதியின்மையால் பாதிக்கப்பட்டது.”என கூறியுள்ளார்.