இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 17,000க்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜூலை 22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், படகு சேவை 2023 அக்டோபர் 14 அன்று ஆரம்பிக்கப்பட்டதாகவும், தற்போது இரண்டு படகுகள் சேவையில் உள்ளதாகவும் கூறினார்.
துறைமுக உள்கட்டமைப்பு தொடர்பாக தொடர்ந்து பிரச்சினைகள் நிலவி வருகின்றன என்றும், அவற்றை தீர்க்க இந்தியா உதவ முன்வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சேவை தொடங்கப்பட்டதிலிருந்து 153 படகுப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, சுமார் 17,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இச்சேவை செவ்வாய்க்கிழமைகள் தவிர்த்து தினமும் இயங்குகிறது.
கடல் சீற்றமாக இருக்கும் காலங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக சேவை இடைநிறுத்தப்படும்.

