கொழும்பில் ஒரு தமிழர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்..!
அவர் வழங்கிய தகவலின் பேரில் வவுனியாவில் ஒரு வீட்டில் 5600 போதை மாத்திரைகள் , 10கிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது முழுக்க முழுக்க பாதாள உலக கோஸ்டியினரின் போதைப் பொருள் கடத்தல் கும்பல் என்று தெரிந்தும் வேண்டுமென்றே மீண்டும் புலிகள் என்று வதந்தி பரப்பப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பிள்ளையான் வழங்கிய தகவலின் பேரில் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அடுத்து சுரேஸ்சாலே எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதனால் தமக்கு ஆபத்து வந்துவிட்டது என்பதை உணர்ந்த கோத்தபாயா கும்பல் அதில் இருந்து தப்புவதற்காக மீண்டும் புலிகள் என்ற வதந்தியைப் பரப்புகின்றனர்.
இதற்காக அவர்கள் ஒரு தாக்குதலைக்கூட தென்னிலங்கையில் நிகழ்த்தலாம் என்பதால் அரசு இதற்கு இடங்கொடாது விரைந்து கோத்தபாயாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

