களுத்துறை பேருந்து விபத்து: 21 பேர் படுகாயம்!
களுத்துறை, களிகமுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோரமான பேருந்து விபத்தில் இருபத்தொரு பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் களுத்துறை மற்றும் வரக்காப்பொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

