சீதுவவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்!
சீதுவ பிரதேசத்தில் ராஜபக்சபுர என்ற இடத்தில் இன்று (ஜூலை 21) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, பாதிக்கப்பட்டவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தற்போதைய நிலை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

