ரோஹித அபேகுணவர்தனவின் மகள், மருமகனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை!

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், மருமகனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை!

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கும், மருமகனுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையை மாத்துகம நீதிவான் நீதிமன்றம் விதித்துள்ளது.

வலானா மோசடி தடுப்புப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்தே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இந்த SUV ரக வாகனம், ரோஹித அபேகுணவர்தனவின் மகளால் ஜகத் விதானவின் மகனுக்கு விற்கப்பட்டது என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin