மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் தொடர்பான பயிற்சிப் பட்டறை..!

மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் தொடர்பான பயிற்சிப் பட்டறை..!

மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் மற்றும் தகவல் தொடர்பு மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான மீறலைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (21.07.2025) காலை 09.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், குடும்ப வன்முறைகளை குறைப்பதன் மூலம் மகிழ்ச்சியான குடும்பத்தைக் கொண்டு செல்ல முடியும் எனவும், பிரதேச மட்டத்தில் அடையாளம் கண்டு சரியான வழிகாட்டுதல்களை வழங்க இப் பயிற்சிப் பட்டறையினை சரியாக பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

இவ் பயிற்சிப் பட்டறையின் வளவாளராக சுகாதார அபிவிருத்தி காரியாலயத்தின்வைத்திய கலாநிதி காமினி விக்கிரம பங்குபற்றினார்.

இவ் பயிற்சிப் பட்டறையின் தொடக்க நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, வைத்தியகலாநிதி மோகனகுமார் பங்குபற்றினார்கள்.

இப் பயிற்சி பட்டறையில் மாவட்ட பிரதேச சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்குபற்றாளர்களாக பங்குபற்றினார்கள்.

Recommended For You

About the Author: admin