சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய பொது அமைப்புகளின் கலந்துரையாடல்..!

சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய பொது அமைப்புகளின் கலந்துரையாடல்..!

மேற்படி கலந்துரையாடல் இன்றையதினம்(19.07.2025) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது.

இம்மாதம் 24,25 சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தலும் அதற்கான நூதனப் போராட்டமும் முன்னெடுப்பதற்காக குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் நடத்தப்பட்டது.

 

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது 8 மாவட்டங்களிலும் விடுதலை விருட்சம் நாட்வதற்காக விடுதலை நீரை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

எதிர்வரும் 24, 25 ஆகிய தினங்களில் உங்களது வீடுகளில் இருந்து கொண்டு வரப்படும் ஒரு சிறு துளி நீரையாவது சேகரித்து அவற்றை விடுதலை விருட்சம் நாட்டுவதற்கு பயன்படுத்த முடியும்.

இன விடுதலைக்காகவும் 30 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற கைதிகளின் விடுதலைக்காகவும் குறித்த விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட உள்ளது.

Recommended For You

About the Author: admin