செம்பியன் பற்று பால புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..!

செம்பியன் பற்று பால புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..!

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று மாமுனை இனைப்பு வீதியில் பல காலமாக உடைந்து காணப்பட்ட நிலையில் பருத்தித்துறை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் செம்பியன் பற்று பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இன்றய (18) தினம் ஆரம்பமானது

 

இவ் வீதியில் காணப்படும் பாலத்தின் உடைவால் செம்பியன் பற்று மற்றும் மாமுனை கிராம மக்கள் பல அசோகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளதோடு முக்கியமாக பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை பயணத்திலும் பல பிரச்சனைகளை எதிர் நோக்கி உள்ளனர்

 

மற்றும் செம்பியன் பற்று மாமுனை வழியாக வரும் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் தமது போக்குவரத்து தடப்பயணத்தில் இந்த பாலத்தினை காரணம் காட்டி தமது பணியினையும் புரக்கனித்த சந்தர்ப்பங்களும் உள்ளன

 

மற்றும் கடந்த 2ம் திகதி பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அவர்கள் செம்பியன் பற்று மாமுனை மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த வீதியினையும் பாலத்தினையும் பார்வையிட்டு இரண்டு கிழமைகளில் இதற்கான புணரமைப்பு வேலைகள் இடம்பெரும் என குறிப்பிட்டு சென்றதன் பின் அவரின் விசேட திட்டத்தின் கீழ் இவ் வேலைத்திட்டங்கள் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin