யூடியூப் தளத்தின் அதிரடி நடவடிக்கை..!

யூடியூப் தளத்தின் அதிரடி நடவடிக்கை..!

யூடியூப் சேனல்கள் மூலம் பலர் அதிகளவு பணம் ஈட்டி வரும் நிலையில், அந்நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. யூடியூப் சேனல்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்குப் பணம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகள்:

அதன்படி, ஜூலை 15 ஆம் திகதி முதல் பின்வரும் வகையான வீடியோக்களுக்குப் பணம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது:

மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள்

ஒரு வீடியோ போலவே உருவாக்கப்பட்ட மற்றொரு வீடியோ

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்கள்

மிகக்குறைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள்

மற்றவர்களின் வீடியோவைக் காப்பியடித்து சில திருத்தங்கள் மட்டும் செய்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள்

தரம் குறைந்த வீடியோக்கள்

டெம்ப்ளேட் மாடல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள்

இந்த மாற்றங்கள், யூடியூப் தளத்தில் உள்ளடக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதையும், உண்மையான படைப்பாளர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம், பார்வையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்க யூடியூப் முயற்சிக்கிறது.

Recommended For You

About the Author: admin